மதுரை, மார்ச் 10
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் மதுரை அரசு வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு, ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் கண்காட்சி நடத்தினர். கண்காட்சியில் ஒருங்கிணைந்த பண்ணை முறையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் மாதிரி (மண் புழு உரம் + கோழி + ஆடு வளர்ப்பு குடில்) மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் (சூரிய ஒளி மற்றும் காற்று) பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்பதற்கான மாதிரியும் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அரிசியில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் பற்றியும் கல்லூரி மாணவர்களான தாமரைக்கண்ணன், வெங்கடேஷ், விக்னேஷ், விஜயராம், விஜய்சுந்தரவேல், துரைபாண்டியன் ஆகியோர் விளக்கம் அளித்து கண்காட்சியை நடத்தினர்.
Spread the love