June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஒருங்கிணைந்த பண்ணை மூலம் கழிவுகளை காசாக்குவோம்

இயற்கையோடு இணைந்ததே நம் விவசாயத் தொழில் தற்பொழுது இயற்கை விவசாயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ஆனாலும் விவசாயிகளுக்கு லாபம் குறைவாகவே கிடைக்கிறது பயிரை மட்டுமே நம்பி விவசாயம் செய்பவர்களுக்கு ஆண்டு முழுவதும் லாபம் கிடைப்பதில்லை. தினமும் வருவாய் தரக் கூடிய கறவை மாடு வளர்ப்பை சிறு, குறு விவசாயிகள் நம் நாட்டில் முக்கிய தொழிலாகக் கருதி ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது கறவை மாடுகள் பெரிய அளவில் வைக்கோல் சோளத்தட்டை போன்ற பயிர்க் கழிவுகளையே நம்பி வளர்க்கப்படுவதால் பால் உற்பத்தி குறைவாக உள்ளது. எனவே ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து கழிவுகளை காசாக்கும் முறை பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

ஒருங்கிணைந்த பண்ணையம் என்றால் என்ன?
ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது வேளாண்மையுடன் கால்நடைகள் கோழியினங்கள் மற்றும் மீன் ஆகியவற்றை ஒரே இடத்தில் இணைத்து பராமரிப்பது ஆகும். உதாரணமாக ஒரே இடத்தில் மேல்தளத்தில் கோழிகளும் அவைகளிடும் எச்சத்தைப் பயன்படுத்திக் கொள்ள கீழ் தளத்தில் மீன்களும் வளர்க்கப்பட்டு குளத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரை வேளாண் பயிர்கள் மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு பயன்படுத்துவது ஆகும்.

ஒருங்கிணைந்த பண்ணை முறையின் பயன்கள் :
அதிக உணவு உற்பத்தியின் மூலம் நாட்டின் மக்கள் தொகையின் தேவையை ஈடு செய்ய முடியும். வருடத்திற்கு ஒரு பயிர் மட்டும் சாகுபடி செய்யும் இடங்களில் நீர்ப்பாசனப் பற்றாக்குறை மற்றும் பருவமழை குறைவாக உள்ள இடங்கள் போன்றவற்றில் வேளாண்மையுடன் கால்நடைகளை வளர்க்கும் போது வருடம் முழுவதும் கூடுதல் வருமானம் கிடைக்கும். பன்றி வளர்ப்பு கோழி வளர்ப்பு மற்றும் புறா வளர்ப்பு போன்றவற்றிலிருந்து வரும் கழிவுகளை மறு சுழற்சி செய்வதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்படைகிறது. வேளாண் வனவியலின் மூலம் மண் அரிப்பானது தடுக்கப்படுகிறது.

காலநிலைக்கேற்ப ஒருங்கிணைந்த பண்ணையம் :
மேற்கு மண்டலம் :
நன்செய்
பயிர்+மீன்+பண்ணை+கோழிப்பண்ணை+காளாண் வளர்ப்பு
இறவைப்பகுதி
உயிரி வாயு உற்பத்தி+காளாண்+பால் கறக்கும் கால்நடை

மானாவாரிப் பகுதி
பயிர் உற்பத்தி+தீவனப்பயிர்+மரங்கள்
வடமேற்கு மண்டலம் :
சாகுபடி பயிர்+பால் கறக்கும் பசுக்கள்+கோழிப்பண்ணை
மலைப் பிரதேசம்
சாகுபடி பயிர்+பால் கறக்கும் பசுக்கள்+கோழிப்பண்ணை
காவேரி டெல்டா மண்டலம் :
நெற்+பயிர்+பால் கறக்கும் பசுக்கள்
நெற்+பயிர்+வாத்து வளர்ப்பு+மீன்வளர்ப்பு
நெற்+பயிர்+ஆடு வளர்ப்பு
தெற்கு மண்டலம் :
நெல் சார்ந் தபயிர்+மீன்வளர்ப்பு+கோழிப்பண்ணை
காவேரி டெல்டா மண்டலம் சுழற்சி முறை :
காவேரி டெல்டாவில் நெற்பயிர் தான் முக்கியமான பயிர். நெற்பயரின் கழிவான வைக்கோல் கொண்டு காளான் வளர்க்கலாம். மேலு பால் கறக்கும் பசுக்கள் வளர்க்கலாம். மாட்டின் சாணம் கொண்டு மண்புழு உரம் தயாரிக்கலாம். ஒரே இடத்தில் மேல் தளத்தில் கோழிகளும் அவைகளிடும் எச்சத்தைப் பயன்படுத்திக் கொள்ள கீழ்தளத்தில் மீன்களும் வளர்க்கப்பட்டு குளத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரை வேளாண் பயிர்கள் மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு பயன்படுத்தலாம். கூடுதலாக தீவனம் மற்றும் வாழை சாகுபடி செய்யலாம்.

ஒருங்கிணைந்த பண்ணையம் : 2 ஏக்கர்
உற்பத்தி 6584 கிலோ
மொத்த வருமானம் 533800 ரூபாய்
உற்பத்தி செலவு 301542 ரூபாய்
நிகர லாபம் 232258 ரூபாய்
வேலைவாய்ப்பு 225 மனித நாட்கள்
இடுபொருள்
மறுசுழற்சி ரூபாய் 90012 சேமிப்பு
மண்வள மேம்பாடு 240 கிலோ தழைசத்து, 84 கிலோ மணிசத்து, 184 கிலோ சாம்பல்சத்து

கழிவுகளை காசாக்குவோம் :
பயிரின் கழிவுகள் கொண்டு காளான் வளர்த்து விற்கலாம். மாட்டின் பொருள்கள் கொண்டு பஞ்சகவ்யா, மண்புழு உரம், பசுந்தீவனம் தயாரித்து விற்கலாம். மேலும் கால்நடைகளிடமிருந்து இறைச்சி, பால், முட்டை கிடைக்கும். மேலும் உயிர் வாயு கழிவுகளை கொண்டு தயாரிக்கலாம்.

எனவே ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வேளாண் பயிர்களோடு கால்நடை கோழி மற்றும் மீன் வளர்ப்போடு பசுந்தீவனம் மற்றும் அசோலா உற்பத்தி செய்து பஞ்சகாவ்யா போன்ற சுற்றுச்சூழல் மாசுபடாத பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தினால் வேளாண்மை மற்றும் கால்நடைகளின் உற்பத்தித் திறன் பெருகி பண்ணையாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதால் நமது நாட்டின் முதுகெலும்பான கிராமப் பொருளாதாரம் சிறக்கும் என்பதில் ஐயமில்லை.

கட்டுரையாளர்கள் : ம.ஹரிணி (இறுதி ஆண்டு மாணவி பி.எஸ்சி,) மற்றும் தஞ்சாவூர் ஆர்.வி.எஸ். விவாசாயக் கல்லூரியின் RAWE – தஞ்சாவூர் தொகுதி மாணவிகள், தஞ்சாவூர்.

Spread the love