June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை யில் எண்ணெய் வித்து, பயறு வகை பயிர் மற்றும் பருத்தி சாகுபடி பயிற்சி

விருதுநகர், ஜூன் 22

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விரிவாக்க சீரமைப்பு திட்டம் 2022-23ன் கீழ் மாவட்டத்திற்குள் பயிற்சி என்ற இனத்தின் கீழ், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையில் எண்ணெய் வித்து, பயறு வகை பயிர் மற்றும் பருத்தி சாகுபடி என்ற தலைப்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்குட்பட்ட டி.கடம்பங்குளம் வருவாய் கிராம புல்லூர் கிராமத்தை சார்ந்த 40 விவசாயிகளுக்கு 21.06.2022 அன்று ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. காரியாபட்டி வட்டார துணை வேளாண்மை அலுவலர் கு.தெய்வம் வரவேற்புரை வழங்கினார். வேளாண் அறிவியல் நிலைய தலைவர், முனைவர் ராஜாபாபு, வேளாண் பயிர்களில் நுண்ணூட்ட சத்த குறைபாடு மற்றும் மேலாண்மை குறித்து எடுத்துரைத்தார். முனைவர் வேனுதேவன், பசுந்தாள் பயிர் சாகுபடி குறித்து விரிவாக எடுத்துரைத்தார். முனைவர் ஞானபிரகாசம், பருத்தி பயிர்களில் இரங்களின் முக்கியதுவம் குறித்து எடுத்துரைத்தார் மற்றும் முனைவர் ராம்குமார், நன்மை செய்யும் பூச்சிகளின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். பயிற்சி முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேஸ் நன்றியுரை வழங்கினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் வீரபாண்டி சிறப்பாக செய்திருந்தார்.

Spread the love