May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஒரு முறை உபயோகித்த எண்ணெய் பயோ டீசலாக மாற்ற வாய்ப்பு

நமது நாட்டில் சமையல் எண்ணெயின் நுகர்வு ஆண்டுக்கு 22.5 மெ.டன்னாக உள்ளது. பெரிய ஹோட்டல்களில் ஒரு முறை உபயோகித்த சமையல் எண்ணெய்யை, குறைந்த விலைக்கு சிறு ஓட்டல்கள், சாலையோர பலகார கடைகள் வாங்கி சென்று பயன்படுத்தி நடுத்தர மக்களின் உடல்நல சீர்கேட்டுக்கு வழி வகுக்கின்றனர். இந்த எண்ணெய் திரும்ப திரும்ப உபயோகிப்பதால் புற்று நோய், இதய பாதிப்பு நெஞ்சு எரிச்சல் போன்றவை எளிதாக வர வாய்ப்புள்ளதாக இருக்கும். பொதுவாக கலப்பட எண்ணெய் பாதிப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில் இந்த பாதிப்பும் பாமர மக்களின் அன்றாட வாழ்வில் விளையாடுகிறது. எனவே இத்தகைய குறைபாடுகளை களைய ஓன்றிய அரசும், தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றன. ருக்கோ (RUCO) என்ற அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்கு பயன்படுத்திய எண்ணெயை 1 லிட்டர் ரூ.30 என்ற விலையில் வழங்கப்படுகிறது. இந்த எண்ணெய் பயன்படுத்தி இயற்கை எரிபொருட்கள் தயாரிக்க பயன்படுத்தபடுகிறது. எனவே ஒரு தடவை பயன்படுத்திய எண்ணெய்யை மறுபடி பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் உணவு பாதுகாப்பு துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. எரிபொருட்களின் விலை உயர்ந்த நிலையில் பயோ டீசல் பயன்பாடு இன்றைய கால கட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. எனவே நமக்கு நாமே பொறுப்புணர்ச்சியுடன் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயினை மறுபடியும் பயன்படுத்த கூடாது என்ற முடிவில் உறுதியாக இருப்போம்.

தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை

Spread the love