August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஒற்றை பயிர் சாகுபடி முறை ஏற்றதா?

இன்றைய கால கட்டத்தில பெரிய பண்ணை வைத்துள்ள விவசாயிகள் அவர்களது பண்னணயில் ஓட்டு மொத்தமாக ஓரே பயிரை சாகுபடி செய்கின்றனர் இது இறவை நிலமாக இருந்தாலும் சரி, மானாவாரி நிலமாக இருந்தாலும்சரி இது தவறான அணுகு முறையாகும். எடுத்துக்காட்டாக, நெல், கரும்பு, வாழை, தென்னை என ஓரே பயிரை சாகுபடி ( MONO CROPPING) என்கிறோம். சில சமயங்களில் இது லாபகரமாக இருந்தாலும் பல நேரங்களில் இது சாத்தியப்படவில்லை.

பொதுவாக இன்றைய தினத்தில் விவசாயம் செய்வது என்றால் மிகவும் எளிதல்ல முக்கியமாக (வேலை ஆட்கள் பற்றாக்குறை, இடு பொருட்கள் தட்டுபாடு, போதிய விலை கிட்டாமை) போன்ற இடர்பாடுகளுடன் விவசாயம் செய்யப்படுகிறது. பொதுவாக உழவர்கள் அந்த அந்த பகுதி சந்தை நிலவரங்கள், விற்பனை வாய்ப்புகளை அறிந்து கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக ஓருவர் 5 எக்கர் நிலம் வைத்து இருந்தாலும் அரை எக்கரில் தான் காய்கறி சாகுபடி செய்ய வேண்டும். அதுவும் சுழற்சி முறையில் அந்த அந்த பகுதிகேற்ப எளிதில் விற்பனையாக கூடிய காய்கறிகளை பயிட வேண்டும். இதனால் அவர்களுக்கு தினசரி வருமானம் கிடைக்கும். 1.5 ஏக்கரில் உணவு தானியப் பயிர்களை பயிரிடலாம். (நெல், சிறுதானியங்கள்) ஒரு எக்கர் பரப்பளவில் எண்ணெய் வித்து பயிர்களை பயிரிடலாம். சுமார் அரை ஏக்கரில் பழ வகை மரங்களை பயிரிடலாம் 3/4 ஏக்கரில் பயன் தரம் மரங்களை (வேம்பு, மலை வேம்பு, தீக்குச்சி மரங்கள்) பயிரிட்டால் ஆண்டு வருமானம் கிடைக்கும். 0.2-5 ஏக்கரில் கால்நடைக்குரிய தீவனங்கள், பசுந்தழை தரக்கூடிய மரங்கள்) வளர்க்கலாம். இவ்வாறாக திட்டமிட்டு சாகுபடி செய்தால் கண்டிப்பாக லாபம் கிடைக்க விட்டாலும் கூட நஷ்டமின்றி தப்பிக்கலாம். எனவே ஓற்றை பயிர் சாகுபடி செய்வதை தவிர்த்து பல பயிர் (பன்மய சாகுபடி) செய்வது சால சிறந்ததாக கருதப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் வேளாண்மை ஓரு சூதாட்டமாக உள்ளது. அதில் நிரந்தர வெற்றி பெற பல பயிர் சாகுபடி செய்வோம். ஓன்று பாதித்தாலும் கூட மற்றொரு பயிரில் நல்ல விளைச்சல் கிட்டும். நம்முடைய முயற்சியும் சரியான திட்டமிடல் இருநதால் நஷடம் வருவதற்கான வழி இல்லை என்ற நம்பிக்கையுடன் சாகுபடி செய்வோம்.

தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை.

Spread the love