நாமக்கல், மார்ச் 30
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் நாமக்கல் பிஜிபி வேளாண்மை கல்லூரியில் இளங்கலை இறுதி ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். இப்பயிற்சியின் கீழ் குருக்காபுரம் எனும் கிராமத்தில் வேளாண் மாணவிகள் விவசாயிகளுக்கு ஒளிப்பொறி பற்றி விரிவாக விளக்கினார்கள். இது பூச்சிகளை கட்டுப்படுத்தும் கருவியாக செயல்படுகிறது. இந்த ஒளியின் மூலம் பூச்சிகள் கவரப்பட்டு அழிக்கப்படுகின்றன. இதன் மூலம் பயிர்களை தாக்கும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது விவசாயிகளுக்கு பெரும் பயனுள்ளதாக உள்ளது.
Spread the love