August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஓணான் கொடி

ஓணான் கொடி ஆற்றங்கரையில் தரையோடு நீண்டு வளரும். இலைகள் முனையில் இரண்டாய் பிளந்திருக்கும். இளம் சிவப்பு ஊது குழல் வடிவ மலர்களையும், உருண்டையான காய்களையும் உடைய கொடி முழுமையும் மருத்துவ பயன் உடையது. உடல் தேற்றுதல், உடல் உரமாக்குதல், மலம் விளக்குதல் ஆகிய குணம் உடையது. 20 கிராம் சமூகத்தை பொடியாய் அறிந்து 400 மில்லி நீர் விட்டு 100 மில்லி ஆகும் வரை, சுண்டக்காய் வடிகட்டி 30 மில்லி அளவாக காலை, மாலை, மதியம் கொடுத்து வர மூட்டு வலி, கண் சூலை, சிறுநீர் நோய்கள், காமாலை ஆகியவை தீரும். இலையை அரைத்து களி போல் கிளறி கட்டிகள் மீது வைத்து கட்டி வர அவை பழுத்து உடையும். இலையை நீர் விட்டு கொதிக்க வைத்து மூட்டு வலி, வீக்கம் ஆகியவற்றுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். வெங்காயம் 100 கிராம் மென்மையாய் அரைத்து தாய்ப்பால், சிற்றாமணக்கு எண்ணெய், வகைக்கு முந்நூறு மில்லி சேர்த்து பலமுறை காய்ச்சி வைத்துக் கொண்டு காலை, மாலை ஐந்து மில்லி கொடுத்து வர குழந்தைகளின் ஆசனவாய் வெளித்தள்ளுதல் தீரும். சரியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்யவும்.

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம், 94423 11505.

Spread the love