விலை சரிக்கட்டல் நிதி காதி நிறுவனங்களை காப்பாற்றியுள்ளது
புது தில்லி, மார்ச் 14
சந்தையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் மற்றும் இதர பின்விளைவுகளைக் கருத்தில் கொண்டு, சிறப்பு இருப்பு நிதியை உருவாக்கும் தொலைநோக்கு கொள்கை முடிவை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் கேவிஐசி 2018ல் எடுத்தது. கச்சா காட்டன் விலை பெருமளவுக்கு உயர்ந்துள்ளதால், ஜவுளி தொழில் முழுவதும் பாதிப்புக்குள்ளாகி உள்ள சூழலில், சிறப்பு இருப்பு நிதியின் சரிக்கட்டல் மூலம், நாடு முழுவதும் அனைத்து காதி நிறுவனங்களும் காப்பாற்றப்பட்டுள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளாக, ஜவுளித்துறை முழுவதும் கடும் கச்சா காட்டன் விலை உயர்வு, பற்றாக்குறை நிலவி வருகிறது. 2018ம் ஆண்டில் காதி ஆணையம் சிறப்பு நிதி ஏற்படுத்தும் முடிவை எடுத்தது. இது தற்போது காதி நிறுவனங்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. விலை உயர்வால் ஏற்படும் நிதி நெருக்கடி இருப்பு நிதி சரிக்கட்டல் நடவடிக்கை மூலம் சரி செய்யப்பட்டுள்ளது.