நொய்டா, ஏப்.24
தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த முன்னணி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் வருவாய் கடந்த நிதியாண்டில் 1,000 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நொய்டாவில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 57 சதம் அதிகரித்து ரூ.19,642 கோடியாக இருந்தது.
இது, முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.18,590 கோடியாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,154 கோடியிலிருந்து 6.1 சதம் சரிவடைந்து ரூ.2,962 கோடியாக குறைந்துள்ளது. கடந்த முழு நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் 17.6 சதம் அதிகரித்து ரூ.13,011 கோடியாகவும், வருவாய் 6.7 சதம் உயர்ந்து ரூ.75,379 கோடியாகவும் இருந்தது.
யஹச்சிஎல் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 1,000 கோடி டாலரை தாண்டியுள்ளதை குறிக்கும் விதமாக பங்கு ஒன்றுக்கு ரூ.10 இடைக்கால ஈவுத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.