September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு அதிகரிப்பு

புது தில்லி, செப்.11

கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் முதலீட்டு வரத்து விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது: கோல்டு ஈடிஎஃப் திட்டங்களிலிருந்து கடந்த ஜூலை மாதத்தில் முதலீடுகள் வெளியேறிய நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் அந்த திட்டம் ரூ.24 கோடி மதிப்பிலான முதலீட்டை ஈர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், நடப்பாண்டின் முதல் எட்டு மாதங்களில் (ஜனவரி-ஆகஸ்ட்) இவ்வகை திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடு ரூ.3,070 கோடியை எட்டியுள்ளது. மேலும், ஜூலையில் தங்க ஈடிஎஃப் திட்டங்களில் 19.13 லட்சமாக இருந்த முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கை ஆகஸ்டில் 21.46 லட்சமாக உயர்ந்துள்ளதாக இந்திய பரஸ்பர நிதிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Spread the love