September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லரைப் பணவீக்கம் 5.3 சதமாக சரிந்தது

புது தில்லி, செப்.14

நாட்டின் சில்லரைப் பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 5.3 சதமாக சரிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) தெரிவித்துள்ளதாவது:

நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லரைப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 5.3 சதமாக சரிந்துள்ளது. காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை கணிசமான அளவில் சரிந்துள்ளதே இதற்கு முக்கிய காரணம். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இப்பணவீக்கம் 6.6 சதமாக உயர்ந்திருந்தது.

உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 9.05 சதத்திலிருந்து 3.11 சதமாக குறைந்துள்ளதாக என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.

Spread the love