January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கடந்த ஆண்டில் எஸ்கார்ட் நிறுவனத்தின் டிராக்டர்களின் விற்பனை 24.1 சதம் உயர்வு

சென்னை, மே 15

கடந்த ஆண்டில் முன்னணியில் வேளாண் உபகரணங்கள் தயாரிப்பில் உள்ள எஸ்கார்ட் நிறுவனத்தின் டிராக்டர்களின் விற்பனை 24.1 சதம் உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து எஸ்கார்ட்ஸ் நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது: எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் இருமடங்கு அதிகரித்துள்ளது.

மேலும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வருமானம் 2021 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.2,228.75 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2019-20ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,385.65 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த நிகரலாபம் ரூ.127.73 கோடியிலிருந்து இருமடங்கு அதிகரித்து ரூ.285.41 கோடியைத் தொட்டுள்ளது.

கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.5,810.09 கோடியிலிருந்து ரூ.7,014.42 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோன்று ஒட்டுமொத்த நிகர லாபமும் ரூ.471.72 கோடியிலிருந்து ரூ.871.63 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2020-21வது நிதியாண்டில் இந் நிறுவன டிராக்டர்களின் விற்பனை 24.1 சதம் உயர்ந்து 1,06,741-ஆக இருந்தது என தெரிவித்துள்ளது.

Spread the love