August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கடந்த ஏப்ரலில் 2493.26 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி

புது தில்லி, மே 21

கடந்த மாதம் உற்பத்தி செய்யப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் அறிக்கை மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 2493.26 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. இது இலக்கு அளவை விட 1.16 சதவீதம் அதிகம். ஆனால், கடந்தாண்டு ஏப்ரல் மாத உற்பத்தியைவிட 2.07 சதவீதம் குறைவு.

கடந்த மாதம் இயற்கை எரிவாயு 2651. 49 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் உற்பத்தி செய்யப்பட்டது. இது கடந்தாண்டு ஏப்ரல் உற்பத்தியை விட 22.68 சதவீதம் அதிகம். ஆனால், மாத இலக்கை விட 1.02 சதவீதம் குறைவு. கடந்த மாதம் பெட்ரோலியப் பொருட்களின் மொத்த உற்பத்தி 20891.57 ஆயிரம் மெட்ரிக் டன். இது மாத இலக்கை விட 1.04 சதவீதம் குறைவு. ஆனால் கடந்தாண்டு ஏப்ரல் மாத உற்பத்தியை விட 30.90 சதவீதம் அதிகம்.

Spread the love