August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கடந்த ஏப்ரல் மாதத்தில் மாருதி சுசூகியின் உற்பத்தி 7 சதம் சரிவு

புது தில்லி, மே 8

நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகியின் வாகன உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் 7 சதம் சரிவடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து மாருதி சுசூகி நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,59,955 கார்களை உற்பத்தி செய்துள்ளது. இது, முந்தைய மார்ச் மாதத்தில் உற்பத்தியான 1,72,433 வாகன எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 7 சதம் குறைவாகும் என தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த மார்ச்சில், ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ உள்ளிட்ட சிறிய ரக கார்களின் உற்பத்தி 28,519-ஆக இருந்த நிலையில், ஏப்ரலில் 29,056-ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், வேகன்ஆர், செலிரியோ, இக்னிஸ், ஸ்விஃப்ட், பலேனோ மற்றும் டிசையர் கார்களின் உற்பத்தி ஏப்ரலில் 95,186 என்ற எண்ணிக்கையிலிருந்து 83,462-ஆக சரிவடைந்துள்ளது.

அதேபோல், 2021 மார்ச்சில் 32,421-ஆக இருந்த ஜிப்ஸி, எர்டிகா, எஸ்-கிராஸ், விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எக்ஸ்எல்6 உள்ளிட்ட கார்களின் உற்பத்தி 31,059-ஆக குறைந்துள்ளது. இலகு ரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரி உற்பத்தி கடந்த ஏப்ரலில் 2,390-ஆக இருந்தது. இதன் உற்பத்தி, 2021 மார்ச் மாதத்தில் 2,397-ஆக சற்று அதிகரித்திருந்தது.

மேலும், கோவிட் தொற்று பொதுமுடக்கம் காரணமாக 2020 ஏப்ரலில் வாகன உற்பத்தியில் ஈடுபடவில்லை என மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love