July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கடந்த ஏப்ரல் மாதத்தில் மஹிந்திரா வாகன விற்பனை 10 சதம் சரிவு

புது தில்லி, மே 3

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை கடந்த ஏப்ரல் மாதத்தில் 10 சதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது ஏப்ரலில் கோவிட் தொற்று வெகுவாக அதிகரித்ததன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதையடுத்து, ஏப்ரலில் நிறுவனத்தின் வாகன விற்பனை 36,437-ஆக சரிந்தது. இது, முந்தைய மார்ச் மாத விற்பனையான 40,403 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 10 சதம் சரிவாகும். பொதுமுடக்கம் காரணமாக கடந்தாண்டு ஏப்ரலில் நிறுவனத்தின் விற்பனை பூஜ்யமாக இருந்தது.

நடப்பாண்டு ஏப்ரலில் உள்நாட்டு சந்தையில் பயணிகள் வாகன விற்பனை 18,285-ஆக இருந்தது. இது, முந்தைய மார்ச் மாத விற்பனையான 16,700 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 9 சதம் அதிகமாகும்.

அதேநேரம், இதே காலகட்டத்தில் வர்த்தக வாகன விற்பனை 21,577லிருந்து 25 சதம் சரிவடைந்து 16,147-ஆனது. ஏற்றுமதி 2,126-லிருந்து சற்று குறைந்து 2,005-ஆக இருந்தது. 2020 ஏப்ரலில் 733 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love