மும்பை, மே 4
கடந்த ஏப்ரல் மாத ஏற்றுபமதியில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 592 சதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக செய்தகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: நாட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பொது முடக்கம் அமலில் இருந்தது. இதன் காரணமாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் 1,26,570 யூனிட்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது.
மேலும், ஏற்றுமதியை பொருத்தவரை கடந்த மாதம் மட்டும் 2,21,603 யூனிட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 592 சதம் அதிகம் ஆகும். மேலும், ஒட்டுமொத்த ஏற்றுமதியை எடுத்துக் கொண்டால் இந்த எண்ணிக்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் 2020 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2021 மார்ச் மாதத்தில் 1,81,393 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரலில் பஜாஜ் ஆட்டோ 30.22 சதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.