January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கடந்த நிதியாண்டில் சோழமண்டலம் ஃபைனான்ஸியல் ஒட்டமொத்த வளர்ச்சி 51 சதம் அதிகரிப்பு

சென்னை, மே 15

முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த சோழமண்டலம் ஃபைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த லாபமாக ரூ.1,764 கோடியை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கடந்த மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த 2020-21ம் நிதியாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய ஒட்டுமொத்த வருவாய் 6 சதம் அதிகரித்து ரூ.13,905 கோடியாக இருந்தது. 2019-20ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.13,136 கோடியாக காணப்பட்டது. ஒட்டுமொத்த அளவில் நிறுவனம் ஈட்டிய வரிக்கு பிந்தைய லாபம் கணக்கீட்டு நிதியாண்டில் ரூ.1,165 கோடியிலிருந்து 51 சதம் வளர்ச்சி கண்டு ரூ.1,764 கோடியை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், தனிப்பட்ட முறையில் நிறுவனத்தின் வருவாய் கடந்த நிதியாண்டில் ரூ.90.90 கோடியிலிருந்து ரூ.58.14 கோடியாக குறைந்தது. வரிக்கு பிந்தைய லாபமும் ரூ.83.33 கோடியிலிருந்து ரூ.21.71 கோடியாக சரிவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. முதலீட்டாளர்களுக்கு கடந்த நிதியாண்டுக்கு ரூ.1 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு 55 சத இறுதி ஈவுத்தொகை வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love