August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கடந்த நிதியாண்டில் டிசிஎஸ் சிஇஓ ரூ.20.36 கோடி ஊதியம் பெற்றார்

புது தில்லி, மே 20

டாடா குழுமத்தை சேர்ந்த, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான ராஜேஷ் கோபிநாதன் கடந்த நிதியாண்டில், ரூ.20.36 கோடியை ஊதியமாக பெற்றுள்ளதாக, நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

இதற்கு முந்தைய நிதியாண்டான 2019 – 2020ல், இவர் மொத்த சன்மானமாக ரூ.13.3 கோடி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. டிசிஎஸ் நிறுவனத்தின் ஆண்டறிக்கையின்படி கடந்த 2020 – 2021 நிதியாண்டில், கோபிநாதன் ரூ.1.27 கோடியை சம்பளமாகவும்; ரூ.2.09 கோடியை சலுகை உள்ளிட்டவைகளின் வாயிலாகவும்; ரூ.17 கோடியை கமிசனாகவும் பெற்றுள்ளார்.

மேலும், டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியான என்.கணபதி, கடந்த நிதியாண்டில் ரூ.16.1 கோடியை ஊதியமாக பெற்றுள்ளார். இதில் ரூ.1.21 கோடியை சம்பளமாகவும்; ரூ.1.88 கோடியை சலுகையாகவும்; ரூ.13 கோடியை கமிசனாகவும் பெற்றுள்ளார்.

கடந்த நிதியாண்டில், நிர்வாக பொறுப்பில் இருக்கும் நபர்களின் சன்மான உயர்வு 55.22 சதம் ஆகும். மேலும், இந்தியாவின் சராசரி ஊதிய உயர்வு 5.2 சதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிட் தொற்றால் வருவாய் சிறிது சரிவைக் கண்டாலும், கடந்த நிதியாண்டில், மொத்தம் ரூ.1.64 லட்சம் கோடி வருவாயை இந்நிறுவனம் ஈட்டியுள்ளது.

Spread the love