January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கடந்த நிதியாண்டில் மியூச்சுவல் பண்டு துறையில் 81 லட்சம் முதலீட்டாளர் கணக்குகள் துவக்கம்

புது தில்லி, ஏப்.28

கடந்த நிதியாண்டில், மியூச்சுவல் பண்டில், 81 லட்சம் முதலீட்டாளர் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ன.

மேலும், இந்த வளர்ச்சி நடப்பு நிதியாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான, ஆம்பி தெரிவித்துள்ளதாவது:

கடந்த நிதியாண்டில் மட்டும், 81 லட்சம் முதலீட்டாளர் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மொத்த கணக்குகள் எண்ணிக்கை, 9.78 கோடி ஆக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி, நடப்பு நிதியாண்டிலும் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த, 2019-20ம் நிதியாண்டில், மொத்தம், 72.89 லட்சம் கணக்குகள் துவக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. முதலீட்டாளர்கள் தங்களுடைய நிதி இலக்குகளை அடைய, மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வதன் முக்கியத்துவம் குறித்து அதிகம் அறிந்து வருகின்றனர். இதை அடுத்து, மியூச்சுவல் பண்டுகளில் செய்யப்படும் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன என ஆம்பி தெரிவித்துள்ளது.

Spread the love