August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கடந்த நிதியாண்டில் வங்கி கடன் வளர்ச்சி 5.56 சதமாக குறைவு: எஸ்பிஐ ஆய்வறிக்கை

மும்பை, ஏப்.26

கோவிட் தொற்று பேரிடர்களை சமாளிப்பதற்காக, மத்திய அரசு, கடன் வழங்கும் முயற்சிகளை எடுத்தபோதிலும், வங்கி கடன் வளர்ச்சி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குறைந்து உள்ளதாக, எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த நிதியாண்டில், வங்கி கடன் வளர்ச்சி, 5.56 சதமாக குறைந்துள்ளது. இது கடந்த, 59 ஆண்டுகளில் இல்லாத குறைவாகும் என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து, எஸ்பிஐ அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நிதியாண்டில், கடனுக்கான தேவை, ரூ.109.51 லட்சம் கோடியாக இருந்தது. இருப்பினும், இது அதற்கு முந்தைய நிதியாண்டினை விட குறைவாகும். கடந்த, 2007-08 நிதியாண்டில் கடன் வளர்ச்சி மிக அதிகமாக இருந்தது. அந்த நிதியாண்டில், 22.3 சத வளர்ச்சி காணப்பட்டது. கடந்த, 1961 -62 நிதியாண்டில் தான் நாட்டின் கடன் வளர்ச்சி மிகவும் குறைவாக இருந்தது. இக்காலத்தில்

வங்கி கடன் வளர்ச்சி, 5.38 சதமாக இருந்தது. இவ்வாறு, எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love