July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கடந்த பிப்ரவரி மாதத்தில் 42.6 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றது ஜியோ

புது தில்லி, மே 14

கடந்த பிப்ரவரி மாதத்தில் 42.6 லட்சம் வாடிக்கையாளர்களை, ஜியோ நிறுவனம் இணைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

கோவிட் தொற்றின் காரணமாக நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கூறி வருகின்றன. இதனால் இணைய இணைப்புக்காக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகளவிலான டேட்டாவினையும், அதே நேரம் வாய்ஸ் கால் சேவையையும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பலவேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களும், பல மாதங்களுக்கு பிறகு வளர்ச்சியினை கண்டு வருகின்றன. கடந்த ஆறு மாதங்களாகவே ஜியோவினை பின்னுக்கு தள்ளி, பார்தி ஏர்டெல் முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், பிப்ரவரியில் மீண்டும் முதலிடத்தினை ஜியோ பிடித்துள்ளது.

மேலும், பார்தி ஏர்டெல் பிப்ரவரி மாதத்தில் 37.3 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. இதே வோடபோன் ஐடியா நிறுவனம் 15 மாதங்களுக்கு பிறகு முதன் முறையாக, பிப்ரவரி மாதத்தில் 6.5 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. எனினும் பொதுத்துறையை சேர்ந்த பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

கடந்த பிப்ரவரி மாத நிலவரப் படி, ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 41.49 கோடியாகவும், ஏர்டெலின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 34.83 கோடியாகவும், வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 28.26 கோடியாக அதிகரித்துள்ளது.

Spread the love