May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கடந்த மாதம் அசோக் லேலண்ட் நிறுவனம் 8,340 வர்த்தக வாகனங்கள் விற்பனை

புது தில்லி, மே 4

கடந்த ஏப்ரல் மாதத்தில் அசோக் லேலண்ட் நிறுவனம் 8,340 வர்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

அசோக் லேலண்ட் நிறுவனம் நடப்பாண்டு ஏப்ரலில் உள்நாட்டு சந்தை மற்றும் ஏற்றுமதி வாயிலாக மொத்தம் 8,340 வர்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகன விற்பனை 4,080ஆகவும், பேருந்துகள் விற்பனை 253-ஆகவும் இருந்தன. அதேபேல், இலகு ரக வர்த்தக வாகன விற்பனை கடந்த ஏப்ரலில் 4,007-ஆக இருந்தது என அசோக் லேலண்ட் நிறுவனம் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது

Spread the love