புது தில்லி, ஏப்.21
கடந்த மார்ச் மாதத்தில் ஊரகப் பணியாளர்களுக்கான சில்லறைப் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வேளாண் பணியாளர்கள் நுகர்வோர் விலை குறியீட்டெண் (சிபிஐ-ஏஎல்) மற்றும் ஊரகத் தொழிலாளர்கள் நுகர்வோர் விலை குறியீட்டெண் (சிபிஐ-ஆர்எல்) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லரை விலைப் பணவீக்கம் கடந்த மார்ச் மாதத்தில் முறையே 2.78 சதம் மற்றும் 2.96 சதமாக அதிகரித்துள்ளன. முந்தைய பிப்ரவரி மாதத்தில் இப்பணவீக்கம் முறையே 2.67 சதம் மற்றும் 2.76 சதமாக காணப்பட்டது.
கடந்தாண்டு மார்ச் மாதத்தில் இப்பணவீக்கம் முறையே 8.98 சதம் மற்றும் 8.69 சதம் என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பே இந்த பணவீக்க உயர்வுக்கு முக்கிய காரணம் என அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது .