January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கடந்த 2019-20ம் நிதியாண்டில் செபியின் வருமானம் 15 சதம் குறைந்தது

மும்பை, டிச.24

கடந்த 2019-20ம் நிதியாண்டில் செபியின் வருமானம் 15 சதம் சரிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து செபியின் ஆண்டு கணக்கு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2020 மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த 2019-20ம் நிதியாண்டில் செபியின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.813.04 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.963.59 கோடியுடன் ஒப்பிடும்போது 15 சதம் குறைவாகும். சந்தா மற்றும் கட்டணங்கள் வாயிலாக கிடைக்கும் வருமானம் குறைந்து போனதே இதற்கு முக்கிய காரணம்.

மேலும், வருமானம் குறைந்த அதேநேரத்தில் செலவினம் ரூ.492.34 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.588.14 கோடியைத் தொட்டது. கட்டணங்கள் மூலமாக கிடைத்த வருவாய் ரூ750.14 கோடியிலிருந்து 608.26 கோடியாகவும், அதேபோன்று, முதலீடுகள் மூலமாக கிடைத்த வருமானமும் ரூ.180.66 கோடியிலிருந்து ரூ.170.35 கோடியாகவும் சரிந்தன. இருப்பினும் இதர இனங்கள் மூலமாக ஈட்டிய வருமானம் ரூ.17.44 கோடியிலிருந்து ரூ.18.15 கோடியாக அதிகரித்தாக செபி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love