புது தில்லி, மே 3
நாடு முழுவதும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளின் எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 3) 29.16 கோடியைக் கடந்தது. இதுநாள் வரை 29,16,47,037 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக சுகதாரம் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,62,93,003 ஆக (81.77%) (மே 3) பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,00,732 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 3,68,147 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, உத்தரப் பிரதேசம், தில்லி, மேற்கு வங்கம், ஆந்திரப்பிரதேசம், ராஜஸ்தான், பிகார் ஆகிய பத்து மாநிலங்களில் மட்டும் 73.78 விழுக்காடு பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 56,647 பேரும், கர்நாடகாவில் 37,733 பேரும், கேரளாவில் 31,959 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் தற்போது 34,13,642 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 17.13 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 3,417 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய உயிரிழப்பு விகிதம் 1.10 சதவீதமாகக் குறைந்துள்ளது.