September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கடலூரில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

கடலூர், செப்.9

கடலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையயழுத்து இயக்கத்தினை கையயழுத்திட்டு தொடங்கி வைத்து பயனாளிக் குழந்தைகளுக்கு பழப்பெட்ட கத்தினை வழங்கினார். மேலும் ஆரோக்கிய வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம் என்பது குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

ஊட்டச்சத்துமாதத்தில் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் வீட்டுத்தோட்டம் அமைக்கமுன் வரவேண்டும் எனவும் நோயற்ற பெருவாழ்விற்கு யோகா மற்றும் ஆயுஷ் கடைபிடிக்கவும் தெரிவித்தார். கண்காட்சியில் இந்த வருட போ­ன் அபியான் தலைப்பின் கீழ் ஆரோக்கிய ஊட்டச்சத்து தோட்டம் உள்ளூரில் கிடைக்கும் ஊட்டச்சத்து பொருட்கள் கொண்டு ஊட்டச்சத்து பெட்டகம் எடை குறைந்த குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் நிலை மேம்பட ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் பெற்றோர்களுக்கு ஊட்டச்சத்து நல கல்வி முறைகள் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
மேலும் அனைத்து வட்டாரங்களில் கடந்த 8 நாள் நடைபெற்ற விழாக்களின் புகைப்படக் கண்காட்சியும்… என் ஆரோக்கியம் என் கையில் என்ற சுயமிமுகப்பு அமைப்பு அமைக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன் வாடிமையத்திற்கும் வைட்டமின் ஊட்டசத்து நிரம்பிய கொய்யா நெல்லி மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.

Spread the love