July 7, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கடலூரில் முட்டை விலை கடும் உயர்வு

கடலூர், ஏப்.22

கடலூரில் கடந்த ஒரு வாரத்தில் முட்டை விலை ரூ.1.50 வரை உயர்ந்துள்ளது.

கடலுார் மாவட்டத்திற்கு தேவையான முட்டைகள் நாமக்கல்லில் இருந்து விற்பனைக்கு வருகின்றன. கடந்த ஆண்டு கரோனா காலகட்டத்தில் முட்டை வாங்க ஆள் இல்லாமல், ஒரு முட்டை ரூ.

2க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் முட்டை ரூ.3.50க்கு விற்னை செய்யப்பட்ட நிலையில், படிப்படியாக உயர்ந்து நேற்று ரூ.5க்கு விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து முட்டை வியாபாரிகள் கூறுகையில், மீன்பிடி தடைகாலம் துவங்கியுள்ளதால் முட்டை விற்பனை அதிகரித்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் விலை உயர்ந்தது. இது

நிரந்தரமானது அல்ல. முட்டை வரத்து அதிகரிக்கும் போது விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர்.

Spread the love