கடலூர், மே 13
கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்க தெலுங்கானாவில் இருந்து, 1400 டன் புழுங்கல் அரிசி ரயில் மூலம் வந்திறங்கியது. கரோனா 2வது பரவல் தீவிரமடைந்துள்ளதால், ஊரடங்கு உத்தரவு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரிசி இலவசமாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மத்திய அரசு தொகுப்பு மூலம் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 24 பெட்டிகளில் 1400 டன் புழுங்கல் அரிசி கடலூர் துறைமுகம் ரயில் நிலையம் வந்தது. மத்திய சேமிப்பு கிடங்கு மேலாளர் சஞ்சீவி மேற்பார்வையில் உணவு கழக மேலாளர் சகாதேவன், உதவியாளர் முகில்வண்ணன் ஆகியோர் அரிசி மூட்டைகளை ஆய்வு செய்தனர். ஆய்விக்கு பின், செம்மங்குப்பத்தில் உள்ள மத்திய கிடங்கிற்கு லாரிகள் அவை அனுப்பி வைக்கப்பட்டன.