August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கடலை எண்ணை மற்றும் வத்தல் விலை உயர்வு

விருதுநகர், ஜூலை 11

விருதுநகர் மார்க்கெட்டில் முண்டுவத்தல் ரூ.18,000 முதல் ரூ.25,000 வரையிலும், ஏ.சி. வத்தல் ரூ.2000 உயர்ந்து ரூ.25,000 முதல் ரூ.27,000 வரையிலும், புது வத்தல் ரூ.15,000 முதல் ரூ.19,000 வரையும் விற்பனையானது. கடலை எண்ணெய் 15 லிட்டர் ரூ.2,900 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.4,868 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.20 விலை குறைந்து ரூ.2,020 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது. நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7,000 ஆக விற்பனையானது. கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.4,000 ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2,000 ஆகவும் விற்பனையானது.

பொரிகடலை விலை ரூ.3,750 ஆகவும், மைதா முதல் ரகம் ரூ.4,000 ஆகவும், 2-ம் ரகம் ரூ.3,110 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,020 ஆகவும், ரவை 25 கிலோ ரூ.1,180 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.910 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.8,100 ஆகவும் விற்பனை ஆனது. பட்டாணி பருப்பு ரூ.8,300 ஆகவும், மசூர் பருப்பு ரூ.10,800 ஆகவும் விற்பனையானது. தற்போது கடலை எண்ணெய் மற்றும் வத்தல் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love