June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கடல்சார் பொருட்கள் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

புது தில்லி, ஜூன் 7

கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி தற்போது 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவாக உள்ள நிலையில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாக்கி ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கொச்சியில் கட ல்சார் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீன் பிடித்தலை அதிகரித்தல், தரம் மற்றும் வகைகளை உறுதி செய்தல் மற்றும் மீன்வளர்ச்சித் துறைக்கு தேவையான ஆதரவை வழங்குதல் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என்று கூறினார்.

ஐக்கிய அரபு எமிரேட், ஆஸ்திரேலியாவுடன் தடையில்லா ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இங்கிலாந்து, கனடாவுடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக பேச்சுக்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஜரோப்பிய யூனியனுடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்கள் வரும் 17ம் தேதி தொடங்கும் என்றும் கோயல் குறிப்பிட்டார்.

Spread the love