August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கடார நாரத்தை

கடார நாரத்தை தோட்டங்களில் வளர்க்கப்படும் சிறு மரம். இலை, பூ, காய் மருத்துவ பயன் உடையவை. மனம் ஊட்டுதல், பசி தூண்டுதல், தாது வெப்பு அகற்றுதல், செரிமானம் மிகுதல், உடலுக்கு குளிர்ச்சி உண்டாக்குதல் ஆகிய மருத்துவ குணம் உடையது. பழச்சாற்றில் செய்யப்பட்ட மனப்பாகு பத்து மில்லி அளவு நீரில் கலந்து கொடுத்து வர சுவையின்மை, பித்தக் கக்கல், காய்ச்சல், நீர்விடாய் முதலியவை தீரும். காயை துண்டு துண்டாக நறுக்கி ஒப்பிட்டு பதப்படுத்தி ஊறுகாயை உணவுடன் உட்கொள்ள சுவையின்மை, பித்தம் முதலியவை தீர்ந்து நல்ல பசியை உண்டாக்கும். இலை, பூ ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட நெய் நறுமணம் மிக்கதாய் இருக்கும். பிற மருந்துகளுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. இதன் விதைகள் மூலத்தை தீர்க்கும். நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம், 94423 11505.

Spread the love