August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கடுகு ரோகினி

கடுகு ரோகினி மலைச்சாரலில் இயல்பாய் வளரும் செடியினம். இதன் உலர்ந்த வேர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வேர் மருத்துவ பயன் உடையது. பித்த நீர் பெருக்குதல், பெரு மலம் போக்குதல், பசி தூண்டுதல், மாதவிடாய் தூண்டுதல் ஆகிய மருத்துவ குணம் உடையது. உலர்ந்த வேரை பொடித்து இரண்டு அல்லது மூன்று கிராம் அளவாக வெந்நீரில் கொடுக்க வாத, பித்த, காய்ச்சல் தீரும். வேர் பொடியை அரை கிராம் அளவாக காலை, மாலை கொடுத்து வர உதிர சிக்கல் தீரும். சிறுநீரக கற்கள், சிறுநீர் பை கற்கள் ஆகியவை வெளியேறும். இறைபை துப்புரவு ஆகும். ஒரு மில்லி கிராம் வேர்ப்பொடியை நாளும் மூன்று வேளை தேனில் குழைத்து கொடுத்து வர ஜன்னி ஜுரம், பக்கவாதம் ஆகியவற்றை குணப்படுத்தி, பசியை மிகுக்கும். வேரை காடியில் உறைத்து பூசிவர படைகள் ஆறும்.

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம், 94423 11505.

Spread the love