January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கடுக்காய்

கடுக்காய் கரும் பச்சையாக நீள்வட்ட இலைகளை மாற்றடுக்கில் கொண்ட ஓர் இலை உதிர் மரம். காய்கள் பளபளப்பாக நீண்ட உருளை வடிவத்தில் இருக்கும். காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடப்பவனும் கோலை வீசி குலாவி நடப்பாரே, இது சித்தர்கள் வாக்கு. கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய் இளம்பிள்ளை தாய்க்கே 7 கடுக்காய் போன்ற பழமொழிகளும், கடுக்காயின் மகத்துவத்தை உணர்த்துகின்றன/ உடல் தேற்றுதல், பித்தம் தணித்தல், திசுக்களை இருக்கச் செய்தல், மலமிளக்கி சிரிக்க வைத்தல், உடல் உரமாக்குதல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது. கடுக்காய் 15 கிராம் கடுக்காய் பொடியுடன் 4 கிராம் கிராம்புப் பொடி சேர்த்து நூறு மில்லி நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து அதிகாலையில் கொடுக்க வயிற்று வலி இன்றி இரண்டு அல்லது மூன்று முறை மலம் கழியும்/ இம்முறையை அவ்வப்போது பயன்படுத்தி வர அக வெப்பத்தை தணிக்கும். இரைப்பை பலப்படும் புலன் பொறிகளை சரிவர இயங்கும். வாயு மூலம் பவுத்திரம் வீக்கம் தலைவலி இதய நோய் ஆகியவை குணப்படும், ரத்தம் தூய்மை அடையும்.

நன்றி ASN சாமி ஆதனூர்

Spread the love