January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கட்டுக்கொடி

நேற்றைய தொடர்ச்சி

கட்டுக்கொடி பெருங்கட்டுக் கொடி இலை அரை எலுமிச்சை அளவு அரைத்து எருமைத் தயிருடன் கொடுக்க பெரும்பாடு தீரும். இலையுடன் மாம்பருப்பும் சமன் அரைத்து பால் சர்க்கரை சேர்த்து காலை, மாலை கொடுக்க பேதி தீரும். கஞ்சி ஆகாரம் மட்டும் கொடுக்கவும். சிறுதளவு வேரும் ஒரு துண்டு சுக்கு 4 மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாத வலி, வாத நோய், கீல் நோய் தீரும். இலைச்சாற்றை சர்க்கரை கலந்து நீரில் கலந்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதை அதிகாலையில் சாப்பிட்டுவர வெள்ளை வெட்டை சீதக் கழிச்சல் இரத்த கழிச்சல் ஆகியவை தீரும். கட்டுக்கொடி வேரையும் கழற்சிப் பருப்பையும் இழைத்து விழுதாக்கிக் கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்கக் குழந்தைகளுக்குக் காணும் வயிற்றுவலி தீரும்.

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர். திருவண்ணாமலை மாவட்டம். 94423 11505.

Spread the love