January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கட்டுக்கொடி

கட்டுக்கொடி இதில் 34 வகை உள்ளதாக நூல்கள் கூறுகின்றன. முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும் படர்ந்து வளரக்கூடிய ஏறுகொடி எனும் இதன் இலைச்சாற்றை நீரில் கலந்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதில் குறிப்பாக சிறு கட்டுக்கொடி, பெரும் கட்டுக்கொடி என இருவகை உள்ளன. இரண்டின் மருத்துவ குணம் ஒன்று தான். இலை, வேர் மருத்துவ பயன் உடையவை, குளிர்ச்சி உண்டாகும். உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயல்படும். 10 கிராம் இலையை மென்று தின்ன இரத்த பேதி, சீத பேதி, மூலக்கடுப்பு எரிச்சல் தீரும். இலையை வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு களைப்பு எரிவு பகு மூத்திரம் தீரும். சிறுநீர் சர்க்கரையையும் தீரும். சூரணமாக்கியும் சாப்பிடலாம். பெரும் கட்டுக்கொடி இலையை அரை எலுமிச்சை அளவு அரைத்து எருமைத் தயிருடன் கொடுக்க பெரும்பாடு தீரும். இலையுடன் மாம்பருப்பும் சமன் அரைத்து பால் சர்க்கரை சேர்த்து காலை, மாலை கொடுக்க பேதி தீரும். கஞ்சி ஆகாரம் மட்டும் கொடுக்கவும். சிறுதளவு வேரும் ஒரு துண்டு சுக்கு 4 மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாதவலி, வாத நோய், கீல் நோய் தீரும்.

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை

Spread the love