July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கட்டுப்பாடின்றி சரக்கு வாகனங்களை அனுமதிக்க வேண்டும் தலைமை செயலருக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை, ஏப்.27

ஊரடங்கின்போது சரக்கு வாகனங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடின்றி முழு தளர்வுடன் அனுமதிக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் கோவிட் தொற்று அதிக அளவில் பரவி வருவதை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியின் காரணமாக இரவு நேர ஊரடங்கு அரசு அண்மையில் பிறப்பித்துள்ளது. இருப்பினும் இரவு நேரங்களில் இயங்கும் சரக்கு போக்குவரத்து வாகனங்களால் நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவே.

இதனால், கடந்த ஆண்டு கோவிட் முதல் அலையின் போது கூட சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கு அரசு எந்தவிதமான தடுப்பு நடவடிக்கையும் இல்லாமல், தங்கு தடையின்றி அனுமதித்தது குறிப்பிடத்தக்கது. அதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கு விலையேற்றமின்றி, தட்டுப்பாடின்றி அரசுக்கு நாங்கள் சேவையாற்றினோம். ஆகவே அதேபோல இம்முறையும் சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடின்றி முழு தளர்வுடன் அனுமதிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love