October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கணக்கன்பட்டியில் சிறப்பு விவசாயக் கருத்தரங்கு

திண்டுக்கல், அக்.8

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், கணக்கன்பட்டியில் DBT ஐந்தாண்டுகள் நிறைவேறியதை முன்னிட்டு கொரமண்டல் உரநிறுவனம் மற்றும் மாவட்ட வேளாண்மை துறை இணைந்து சிறப்பு விவசாயக் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கொரமண்டல் உர நிறுவனத்தின் முதுநிலை மண்டல மேலாளர் K.சிவசங்கரன், தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வேளாண்மை துணை இயக்குநர் P.சுருளியப்பன் மற்றும் பழனி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மீனாகுமாரி, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் வேதாச்சலம், பொன்னுச்சாமி டிரேடர்ஸ் உரக்கடை உரிமையாளர் சாமிதுரை, கலந்து கொண்டனர். கூட்டத்தில் உரங்களை விவசாயிகள் வாங்கும்பொழுது விற்பனை முனையக்கருவி மூலம் ஆதார் எண்ணை பயன்படுத்தி உரங்கள் வாங்குமாறு துணை இயக்குநர் சுருளியப்பன் அறிவுறித்தினார்.
மண்டல மேலாளர் சிவசங்கரன் கூறுகையில், மாநிலத்தில் நிலவும் உரத்தட்டுப்பாட்டின் காரணம் மற்றும் விவசாயிகள் அதை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் விவசாயிகள் அதிகபட்ச சில்லறை விலையில் உரங்களை வாங்குவதற்கு ஆதார் எண்ணை பயன்படுத்தி உரங்கள் வாங்குமாறும் அளவுக்கு அதிகமான உரப்பயன்பாட்டினை தவிற்குமாறும் அறிவுறுத்தினார். மேலும் மக்காச்சோளம் படைப்புழு தாக்குதல் அரசின் மானியங்கள் பற்றி வேளாண்மை உதவி இயக்குநர் மீனா குமாரி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். கொரமண்டல் உரநிறுவனத்தின் துணை மேலாளர் திவாகர், விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இறுதியாக வேளாண்மை துணை இயக்குநர் சுருளியப்பன் மற்றும் கொரமண்டல் உரநிறுவனத்தின் முதுநிலை மண்டல மேலாளர் சிவசங்கரன், தேனி, திண்டுக்கல் விற்பனை அலுவலர் ஆனந்த ஜோதி, அக்ரானமிஸ்ட் சோனைமுத்து மற்றும் விவசாயிகள் இணைந்து மரக்கன்றுகள் நட்டனர்.

Spread the love