January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும் எனும் நூல் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் வெளியிட்டார்

சென்னை, டிச.24

கணினியில் தமிழை உட்டபுகுத்திக் கணினி சார்ந்த எண்ணற்ற பணிகளை மேற்கொள்ளும் வண்ணம் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மொழியியல், கணினி சார்ந்த பேராசிரியர்கள், வல்லுநர்கள்
எனப் பல்வேறு துறை சார்ந்தவர்களைக் கொண்டு தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் நடத்தப்பட்ட ‘கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்’ என்ற இணையவழிப் பன்னாட்டு மாநாட்டின் மூலம் பெறப்பட்ட சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுப் பன்னாட்டுத்தரப்புத்தக எண்ணுடன் கூடிய இரு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

மேற்படி புத்தகங்களை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வெளியிட்டார். இப்புத்தக வெளியீட்டு நிகழ்வில் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் அவர்கள் தமிழ் மொழியின் பயன்பாட்டைப் பிற மொழியியலாளரிடம் பரப்பவும், பழந்தமிழ் நூல்களைப் பலரும் எளிதில் படித்தறியவும், அறிவியல் முதலான பிற துறை அறிவைத் தமிழில் வழங்கவும் கணினித் தமிழ் பெரிதும் பயன்படுகிறது எனவும், மொழியைக் கணினியின் ஊடாகப் பொதுவான பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தும்போது வளர்ந்து வரும் சமூகம் மேம்பாடு அடைவதற்கு வாய்ப்பாக அமையும் எனவும் தெரிவித்தார்.

Spread the love