இந்த நிலக்கடலை ஆந்திர மாநிலம் கதிரி நகரிலுள்ள என்.ஜி.ரங்கா விவசாய பல்கலைகழத்தில் பணிபுரியும் வேளாண் விஞ்ஞானி கே.எஸ்.எஸ்.நாயக் 2020ஆம் ஆண்டில் உருவாக்கி, அறிமுகப்படுத்தினார்.
இந்த ரகத்தின் சிறப்புகள் என்ன என்பதை பார்ப்போம்.
இந்த ரகம் அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்டது அதிக மகசூல் தரும் 50 சதவிகித எண்ணெய் திறன் கிடைக்கும். இதன் பருப்பு ரோஸ் நிறத்தில் சிறியதாகவும், நுனி கூர்மையாகவும் இருக்கும். அனைத்து பட்டத்திலும் விதைக்கலாம். மற்ற ரகங்களை விட 130 நாள்கள் கழித்து பிடுங்கலாம். முளைப்பு விடாது. இது சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. விவசாயிகளின் லாப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது.
இதன் குறைபாடு
இந்த ரகத்தில் “கசப்பு தன்மை” அதிகம். வெறும் பருப்பாக சாப்பிடவும், சட்னி வைக்க முடியவில்லை. ஒரு பருப்பை கூட முழுமையாக மென்று சாப்பிட முடியாது. ஆனால் இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தினால் நன்றாக இருக்கிறது. இதனால் இந்த ரகத்தை பருப்பாக விற்பனை செய்ய முடியாது. எண்ணெயாக மாற்றி விற்பனை செய்யத்தான் முடியும். இந்த குறைபாடு களைந்தால் இந்த இரகம் மற்ற ரகங்களை விட சிறப்பாக இருக்கும். அதிக மகசூல் அதிக எண்ணெய எடுக்கும் திறன் அறுவடை செய்யும் நாள் வரை இதன் இலைகள் கொட்டாமல் பச்சையாக இருப்பதால், கால்நடைகளுக்கு நல்ல தீவனமாக பயன்படுகிறது போன்ற அம்சங்கள் இருப்பதால் அதிக அளவில் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை.