August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கந்கர்வகோட்டை வட்டாரத்தில் விவசாயிகளுக்கான பால் மற்றும் பால் உபபொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

புதுக்கோட்டை, ஜூலை 20

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாரம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் 2022-2023 மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் 1 நாள் பயிற்சி மட்டங்கால் கிராமத்தில் நடைப்பெற்றது. இப்பயிற்ச்சிக்கு கந்தர்வகோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் ளு.அன்பரசன் தலைமையில், வேளாண்மை துணை இயக்குநர் (அட்மா) மா.பெரியசாமி, உழவர் பயிற்சி மையம், குடுமியான்மலை கலந்துக்கொண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மட்டங்கால் கிராமத்தில் நடப்பாண்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அட்மா திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும் இப்பயிற்சியில் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் கவின்குமார், பேசுகையில் பால் மற்றும் பால் பொருட்களிலிருந்து கிடைக்க கூடிய உபபொருட்கள் மூலம் மதிப்பு கூட்டுதல் செய்து சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என கூறினார். முன்னதாக இரா.மகேந்திரன், வட்டார தொழில் நுட்ப மேலாளர் வவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் ஜெயவேல் மற்றும் துணை வேளாண் அலுவலர் முருகன், வேளாண் பொறியியல் துறை முத்து இருளாண்டி, ஊராட்சி மன்ற தலைவர் செல்லப்பிள்ளை மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பயிற்சி ஏற்பாடுகளை வே.கவியரசன் அட்மா உதவி அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் சங்கர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Spread the love