August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கந்தர்வகோட்டை வட்டாரத்தில் இளைஞர்களுக்கான பண்ணை இயந்திரங்கள் பாரமாரிப்பு பயிற்சி

புதுக்கோட்டை, ஜூலை 4

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் 2022-2023 மாநிலத்திற்குள்ளான விவசாயிகள் 3 நாள் பயிற்சிகான பயணத்தினை வேளாண்மை இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் இராம.சிவக்குமார் தலைமையில், உதவி திட்ட இயக்குநர் (அட்மா) மா.பெரியசாமி உழவர் பயிற்சிமையம் குடுமியான்மலை துவக்க விழாவில் கலந்துகொண்டு பயிற்சி நோக்கம் பற்றி பேசினார். இப்பயிற்சியில் 40 விவசாயிகள் 3 நாள் பயணமாக குமுலுர் வேளாண் பொறியியல் கல்லூரிக்கு வட்டார தொழிநுட்ப குழு அமைப்பாளர் எஸ்.அன்பரசன் ஒருங்கிணைந்து அழைத்து செல்லப்பட்டனர். இப்பபயிற்சியில் வேளாண் பொறியியல் கல்லூரி, இணை பேராசிரியர் முனைவர் சரவணக்குமார் பேசுகையில், இன்றைய வேளாண்மையில் நவீன இயந்திரங்களின் பயன்பாடு விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் விவசாயிகள் பண்ணை இயந்திரங்களை பயன்பாடு பற்றியும் அதனை பழுது நீக்கம் செய்ய பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறினார். நெல் சாகுபடியில் இயந்திரங்களை பயன்படுத்துவதை பற்றி செயல் விளக்கமாக செய்து காண்பித்தனர். மேலும் இப்பயிற்சியில் முனைவர் பி.கிருஷ்ணகுமார் விவசாயிகளுக்கு அறுவடைக்கு பிந்திய தொழில் நுட்பங்கள், உணவுகளை பதப்படுத்தும் முறை பற்றி எடுத்துக் கூறினார்.

பயிற்சி நிறைவில் முனைவர் எம்.நாகராஜன், நீர் வளம், மண் வள மேலாண்மை, சொட்டு நீர் பாசனம் மேலும் மானவாரி சாகுபடியில் இயந்திரங்கள் செயல்பாடு பற்றியும் எடுத்துக் கூறினார். இப்பயிற்சியில் கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, திருமயம், குண்டனார்கோவில் விவசாயிகள் 40 பேர் பங்கேற்று சிறப்பித்தனர். பயிற்சி ஏற்பாடுகளை இரா.மகேந்திரன் வட்டாளர் தொழிநுட்ப மேலாளார் மற்றும் வே.கவியரசன் செய்திருந்தனர்.

Spread the love