சிவகங்கை, ஜூன் 23
சிவகங்கை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாரத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா – மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் கண்டுவுணர்வு பயணம் வேங்கிடகுளம் பட்டு வளர்ப்பு முன்னோடி விவசாயி விக்டர் ஜான்சன், தோட்டத்திற்கு ஐம்பது விவசாயிகள் அழைத்து வரப்பட்டனர். விவசாயிகளிடயே மல்பெரி மரம் சாகுபடி பற்றி பேசும்போது, இந்த தொழில் நுட்பம் மல்பெரி சாகுபடியில் புதிய யுத்தி என்றும் செடிகளை வளர்பதை விட அதிக லாபம் தரக்கூடியது. மானவாரியாக நடவு செய்யலாம். குறைந்த தண்ணீர் போதுமானது, அதிக இடைவெளி விடுவதால் ஊடுபயிர் செய்ய ஏற்றது. களை மேலாண்மை செய்வது எளிது. ஒரு மரத்தில் இருந்து 15 கிலோ வரை இலை எடுக்க முடியும், விவசாயிகள் மல்பெரி மர வளர்ப்பில் அதிக லாபம் பெறலாம் என்று கூறினார். இக்கண்டுணர்வு பயணத்தின் ஏற்பாடுகளை இரா.மகேந்திரன், வட்டார தொழில் நுட்ப மேலாளர் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் வெ.கவியரசன் ஏற்பாடு செய்திருந்தனர்.
Spread the love