September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கன்டெய்னர் முனையம் அமைக்க அரபு நிறுவனத்துடன் ரூ.2,000 கோடி ஒப்பந்தம்-முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையயழுத்து

சென்னை, செப்.13

தமிழகத்தில் ரூ.2,000 கோடி மதிப்பில் கன்டெய்னர் முனையம் உள்ளிட்டவை அமைப்பது குறித்து, அரபு நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையயழுத்தானது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

ஐக்கிய அரபு அமீரக நாடுகளைச் சேர்ந்த டிபி வேர்ல்டு குழுமம், தூத்துக்குடி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சேலம், ஈரோடு மற்றும் கோவையில் ரூ.2,000 கோடியில் கன்டெய்னர் முனையம், சிறு துறைமுகம், குளிர்பதனக் கிடங்கு, பல்பொருள் கிடங்கு பூங்கா மற்றும் தகவல் தரவு மையம் ஆகியவற்றை நிறுவத் திட்டமிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையயழுத்திட்டது.

தமிழகத்தில் ஏற்கெனவே டிபி வேர்ல்டு குழுமம் ரூ.2,000 கோடி முதலீடு செய்து, 4,000 பேருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் கன்டெய்னர் முனையங்கள், சரக்கு நிலையங்கள், சுங்கக் கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள், உள்நாட்டுக் கிடங்குகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love