October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்

கன்னியாகுமரி, அக்.11

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட இடங்களுக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

திங்கள்கிழமை காலை வழக்கம் போல் 8 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதே நேரம் கன்னியாகுமரியில் வானம் மேக மூட்டத்துடன் மப்பும் மந்தாரமாக காட்சியளித்தது. பின்னர் காலை 10 மணியில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல மழையின் வேகமும் அதிகரித்தது. அப்போது கடலில் சீற்றமும் கொந்தளிப்பும் காணப்பட்டது. இதனால் சுமார் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பின. இதைத் தொடர்ந்து காலை 10-30 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Spread the love