கன்னியாகுமரி, மே 23
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பியே கன்னிப்பூ, கும்பப்பூ என இரு போக சாகுபடி செய்து வருகிறார்கள். கடந்த 2 மாதங்களாக வெயிலின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் சரிந்து காணப்பட்டது. இதனால் கன்னிப்பூ, சாகுபடிக்கு தேவையான தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மாவட்டம் ழுழுவதும் கொட்டிய கனமழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்துடன், பாசனக் குளங்களும் நிரம்பி வழிகிறது.
அணைகளிலும் பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளதையடுத்து கன்னிப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி உள்ளனர். மாவட்டம் முழுவதும் 6,500 ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு சாகுபடி பணி நடந்து வருகிறது.
Spread the love