August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கன மழையால் பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தேனி, ஆக. 1

தேனி மாவட்டத்தில் இடைவிடாது பெய்துவரும் கன மழையினால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கேரளா, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கன மழை கொட்டி வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 134.20 அடியாக இருந்தது. வரத்து 1806 கன அடியாகவும், திறப்பு 1667 கன அடியாகவும் இருந்தது. இருப்பு 5679 மி.கன அடியாக இருந்தது.

71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 68.14 அடியாக இருந்தது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது வினாடிக்கு 3184 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5355 மி. கன அடியாக உள்ளது.

126 அடி உரம் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.08 அடியாக உள்ளது. வரத்து 140 கன அடியாகவும் திறப்பு 3 கன அடியாகவும் உள்ளது. எனவே இந்த அணையின் நீர்மட்டமும் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love