July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கம்பு விதைப்பண்ணை ஆய்வு

திருப்பூர், மே 3

இந்தியாவில் அதிகமாக பயிரிடப்படும் சிறுதானிங்களில் கம்பு முதலிடத்தைப் பிடிக்கிறது. பொதுவாக ஆப்ரிக்க கண்டத்தில் தோன்றியதாக கருதப்படும் கம்பு பயிரானது தற்பொழுது 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் சாகுபடி செய்யப்பட்டு உணவுப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனிதர்களுக்கு உணவாக மட்டுமல்லாமல் கால்நடை தீவனமாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 50 மூ இடத்தை கம்பு பிடித்திருக்கிறது.

தானிங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 மூ புரதசத்து உள்ளது. 100 கிராம் கம்பில் 42 கிராம் கால்சியம், 11 – 12 கிராம் இரும்புச் சத்து உள்ளது. மேலும் ஆரோக்கியமான தோலிற்கும், கண் பார்வைக்கும் முக்கிய சத்தான வைட்டமின் ஏ வை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டின் கம்புப் பயிரில் அதிகளவு உள்ளது.

சிறுதானியம் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடையே பரவலாக ஏற்பட்டதன் விளைவாக கம்பு உணவுப் பொருளாகவும், மதிப்பு கூட்டப்பட்டு கேக், பிஸ்கட் போன்றவைகளாகவும் விற்பனை செய்யப்படுவதால் கம்பிற்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. உடுமலை வட்டாரத்தில் ஆண்டியக்கவுண்டனூர், எலையமுத்தூர் போன்ற பகுதிகளில் மானவாரியாக கம்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கம்பின் விதைத்தேவையை கருத்தில் கொண்டு வேளாண் துறையின் சார்பில் அதிக மகசூல் தரவல்ல இரகங்களான பூசா காம்போகிட் 612, தனசந்தி ஆகிய இரங்களில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு தரமான விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

உடுமலை வட்டாரம் எலையமுத்தூர் கிராமத்தில் ஈஸ்வரன் என்பவரது தோட்டத்தில் பூசா காம்போகிட் 612 இரக கம்பு சான்றுநிலை விதைப்பண்ணை 4 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. பூக்கும் பருவத்தில் உள்ள இந்த விதைப்பண்ணையை திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், பி.ஆ.மாரிமுத்து ஆய்வு செய்தார்.

அப்பொழுது அவர் கூறியதாவது : கம்பு சாகுபடி குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது வரவேற்பிற்குரியதாகும். அதிக நுண்ணூட்ட சத்துகளை உள்ளடக்கிய கம்பு பயிரானது பொதுவாக 30மூ செல்சியஸ் வெப்பநிலையில் வளரக்கூடியது மானாவாரியாக பயிரிடப்படும் இப்பயிருக்கு 40 – 60 செ.மீ மழைப்பொழிவு போதுமானது. இந்தியாவில் இராஜஸ்தான் மாநிலத்தில் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டாலும் தமிழகத்தில் அதன் உற்பத்தி திறன் அதிகமுள்ளது. ஒரு ஹெக்டருக்கு 4-5 கிலோ விதை மட்டுமே போதுமானது. ஜீன் – ஜீலை மாதத்தில் நடவு செய்யும் பொழுது வளர்ச்சிப்பருவத்தில் கிடைக்கும் ஈரப்பதமானது அதிக மகசூல் பெற ஏதுவாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு விதைகளை விவசாயிகளுக்கு வழங்க ஏதுவாக விதைப்பண்ணைகள் உடுமலை வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கம்பு அயல் மகரந்த சேர்க்கை பயிர் என்பதால் ஆதார நிலை விதைப்பண்ணைக்கு 400 மீட்டர் மற்றும் சான்று நிலை விதைப்பண்ணைக்கு 200 மீட்டர் பயிர் விலகு தூரம் பராமரிக்கப்படுகிறது. பிற இரகக் கலவன் மற்றும் குறித்தரியப்பட்ட நோய்கள் வயலாய்வின் மூலம் கணக்கீடு செய்யப்பட்டு வயல் தரத்தில் தேறும் விதைப்பண்ணைகள் விதைச்சான்று அலுவலர்களால் அறுவடைக்கு அனுமதிக்கப்படுகிறது.

அறுவடை செய்யப்பட்ட விதைக்குவியல்களின் மாதிரி எடுக்கப்பட்டு முளைப்புத்திறன், புரச் சுத்தம் மற்றும் ஈரப்பதம் ஆகிய காரணிகளை அறியும் பொருட்டு அரசு அங்கீகரிக்கப்பட்ட விதைப் பரிசோதனை ஆய்வகங்களில் பகுப்பாய்விற்கு அனுப்பப்படும். விதைத் தரத்தில் தேறும் விதைக்குவியல்கள் விதைச்சான்று அலுவலர்களால் சான்று செய்யப்பட்டு தரமான சான்று பெற்ற விதைகளாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.

நுகர்வோரிடையே சிறுதானிய தேவை அதிகரித்துள்ளதால் வாய்ப்பினை பயன்படுத்தி தரமான விதைகளைக் கொண்டு சிறுதானிய சாகுபடி மேற்கொண்டு குறைந்த செலவில் அதிக இலாபம் பெற்று விவசாயிகள் பயனடைய வேண்டுமென அவர் தெரிவித்தார்.

Spread the love