June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கரியமாணிக்கத்தில் ஊரக பங்கேற்பு மதிப்பீடு நிகழ்வில் வேளாண் மாணவிகள்

திருச்சி, ஏப்.4

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்திலுள்ள No.94 கரியமாணிக்கம் கிராமத்தில் நாளந்தா வேளாண்மை கல்லூரி மாணவிகள் (குழு எண் – 1, அபிதா, அகல்யா, பாலப்பிரியா, தேவி ‌கீத்திகா, கவினா, மோனிஷா, நிஷா, பிரியா, சத்திய பிரிய தர்ஷினி) ஆகியோர் அக்கிராமத்திற்கான ஊரக பங்கேற்பு மதிப்பீட்டில் (PRA) இடம் பெற்றுள்ள சமூக வரைபடம், காலக்கோடு, பருவ கால அட்டவணை, பிரச்சினை மரம் ஆகியவற்றை வரைபடமாக வரைந்து காட்டி, அவ்வூர் மக்களுக்கு விளக்கம் அளித்தனர்.

மேலும் நெல் விதை நேர்த்தி செய்வது ‌எப்படி? என்பது பற்றியும், திரவ உயிரி உரத்தின் நன்மைகள் பற்றியும், வேப்ப‌ விதைக் கரைசலின் தயாரிப்பு மற்றும் அதன் பயன்களையும் எடுத்து கூறி அவற்றை செயல் விளக்கம் செய்து காட்டினர்.

Spread the love