January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கருப்பட்டி தயாரிப்பு தீவிரம்

திண்டுக்கல், மே 17

பனை சீசன் என்பதால் கருப்பட்டி தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டாரம், ஆர்.கோம்பை ஊராட்சி பகுதியில் கருப்பட்டி தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஆர்.கோம்பை, கோவிலூர் தோப்பூர், ரெட்டியபட்டி, தாசமநாயக்கன்பட்டி, சின்னழகு நாயக்கனுார் பகுதியில் அதிகளவில் பனை மரங்கள் உள்ளன. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட பனை தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது பனை சீசன் என்பதால் நுங்கு காய்களை வெட்டி விற்பனை செய்வது, பதநீர் இறக்கி அதை காய்ச்சி கருப்பட்டி தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில் பனைத் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வியாபாரிகளுக்கு கருப்பட்டி கிலோ ரூ.200க்கு விற்பனை செய்கின்றனர்.

Spread the love