June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கரும்புத் தோகை மற்றும் ஆலை அழுக்கு கொண்டு ஊட்டமேற்றிய எரு தயாரித்தல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டாரத்தில் கரும்புத் தோகை மற்றும் ஆலை அழுக்கு கொண்டு ஊட்டமேற்றிய எரு தயாரித்தல் குறித்து வேளாண்மை துறை உதவி இயக்குநர் மற்றும் அட்மா திட்ட பணியாளா்கள் தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தனர்.

· காய்ந்த கரும்புத் தோகையை 15 செ.மீ. உயரத்திற்கு சுமார் 7 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலப் பாத்திகளாக பரப்பவும்.
· அதற்கு மேல் 5 செ.மீ. உயரத்திற்கு கரும்பு ஆலை அழுக்கினை பரப்பி விடுதல் வேண்டும்.
· சூப்பர் பாஸ்பேட், ஜிப்சம் மற்றும் யூரியா உரங்களை முறையே 2:2:1 என்ற விகிதாச்சாரத்தில் கலந்து தோகை மற்றும் ஆலை அழுக்கு அடுக்கின் மீது 100 கிலோ தோகைக்கு 5 கிலோ உரக்கலவை என்ற விகிதத்தில் பரவலாகத் தூவிவிட வேண்டும்.
· பின்னர் அடுக்கு முழுவதும் நன்கு நனையும் வண்ணம் தண்ணீர் தெளிக் கவேண்டும்.
· மேலே குறிப்பிட்டுள்ள இடுபொருள்கள் ஒவ்வொன்றையும் அதே அளவில் மற்றும் அதே முறையில் திரும்பவும் கொடுத்து கடைசியாக அடுக்கின் மொத்த உயரம் 1.5 மீட்டர் அளவு வருமாறு செய்ய வேண்டும்.
· தண்ணீர் தெளிப்பதற்கு பதிலாக கிடைக்கும் இடங்களில் தொழுஉரக் கரைசல் பயன்படுத்தலாம்.
· பின்னர் அடுக்கு முழுவதையும் மண் மற்றும் ஆலை அழுக்கு முறையே 1:1 என்ற விகித அளவில் கலந்த கலவை கொண்டு 15 செ.மீ. உயர அளவிற்கு மூடி விட வேண்டும்.
· இவ்வடுக்கினை மூன்றுமாதத்திற்குமக்குவதற்காகஅப்படியே விட்டுவிட வேண்டும்.
· 15 நாட்களுக்கு ஒரு முறை அடுக்கு முழுவதும் நனையும் வண்ணம் நீர் தெளிக்க வேண்டும்.
· மூன்று மாதமானதும் அடுக்கினை புரட்டி பின்னர் நன்கு கலந்து விட்டு ஒரு மாதத்திற்கு அப்படியேவிட வேண்டும்.
· நான்காவது மாத முடிவில் மறுபடியும் புரட்டிவிட்டு பின் கலந்து 5வது மாத முடிவு வரை 15 நாள் இடைவெளியில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
· இம்முறையில் தயாரிக்கப்படும் கரும்புத் தோகை கம்போஸ்டில் தழை, மணி மற்றும் கால்சியம் சத்துக்களின் அளவு அதிகமாக இருப்பதோடு கரிமம் மற்றும் தழைச்சத்தின் விகிதாச்சாரம் கரும்புத் தோகையின் அளவைவிட 10 மடங்கு குறைவாக இருக்கும்.

கரும்பு தோகை, ஆலை அழுக்கு மற்றும் கரும்புத் தோகை கம்போஸ்டில் உள்ள சத்துக்களின் அளவுகள்:

சத்துக்கள் கரும்புதோகை ஆலைஅழுக்கு கரும்புத்தோகைகம்போஸ்ட்
தழைச்சத்து 0.40 1.90 1.60
மணிச்சத்து 0.13 1.50 1.10
சாம்பல்சத்து 0.40 0.50 0.40
கால்சியம் 0.56 3.00 1.00
மெக்னீசியம் 0.30 2.00 0.60
கந்தகம் 0.12 0.50 0.48
நுண்ணூட்டச் சத்துக்கள் (மில்லியனில் ஒருபங்கு)
இரும்பு 360 2240 2710
மெக்னீசியம் 110 400 450
துத்தநாகம் 90 360 370
தாமிரம் 30 130 80

கரிமம் தழைச்சத்துவிகிதம் 113:1 16:1 22:1

Spread the love